DEPARTMENT OF TAMIL

அறிமுகம் (About)

தமிழ்த்துறை என்பது தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் மரபுகளைப் பாதுகாத்து வளர்க்கும் முக்கியமான கல்வித்துறையாகும். இதன் மூலம் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆழத்தை அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழியின் பெருமையை உலகளவில் பரப்புவதிலும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் உறுதுணையாக அமைக்கிறது. மேலும் தமிழர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் முக்கியத்தளமாகும். இது மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது.

வரலாறு (History)

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ்த்துறை அனைத்து துறைகளுக்கும் பொதுத்தமிழ் (Part – 1) வகுப்பு எடுக்கும் துறையாக இருந்து வந்தது. தமிழின் முன்னேற்றம் கருதி மாணவ மாணவிகளைத் தேர்வு நோக்கிலும் படைப்புத் திறனை வளர்க்கும் நோக்கிலும் 2014 ஆம் ஆண்டு தமிழ்த்துறை தனித்துறையாக வளர்ச்சி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதுகலைத் துறையாக முன்னேற்றம் கண்டு மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஏற்ப சிறப்பான முறையில் பணிபுரிந்து வருகின்றோம்.

இலக்கு (Vision)

style ="text-align:justify;" தமிழ்த்துறை தனது கல்வித்திட்டங்களின் வாயிலாக மொழித்திறனும் சமூக அக்கறையும் தெளிந்த ஞானமும் நுட்பமான பகுத்தறியும் ஆற்றலும் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் அவர்களை அறநெறி, மனிதநேயம், சமத்துவம், ஆன்மீகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களில் மேம்பட்டவர்களாக விளங்கச் செய்வதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

நோக்கு (Mission)

தமிழ்மொழியின் வளமையையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளச் செய்தலையும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெற வைத்தலையும் நோக்காகக் கொண்டுள்ளது. அதன் வழி தமிழ் மொழியில் எழுதாற்றலும் பேசாற்றலும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் மொழிபெயர்ப்புத்திறன், பன்மொழித்திறன், சமூகத்தை எதிர்கொண்டு வழிநடத்தும் ஆளுமைத்திறன், உலகை அழகியல் உணர்வுடனும் உறவுக் கண்ணோட்டத்துடனும் நோக்கும் திறன் உடையவர்களாகவும் அவர்களைச் செம்மைப்படுத்துதலே தமிழ்த்துறையின் நோக்கமாகும்.

துறையால் வழங்கப்படும் திட்டங்கள் (Programmes Offered)

தமிழ் இளங்கலை (B.A.TAMIL)
தமிழ் முதுகலை (M.A.TAMIL)

குறிக்கோள் (Programmes Educational Objectives)

கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம் போன்ற படைப்பாற்றல் திறனை வளர்த்தல், படைப்பாற்றல் திறன் மூலம் நூல் வெளியிடச் செய்தல், சினிமாத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற ஆர்வத்தை ஊட்டல், போட்டித்தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளித்தல், பட்டிமன்றப் பேச்சாற்றலை வளர்த்தல், மேடைப்பேச்சினை வளர்க்கச் செய்தல் போன்ற திறன்களை வளர்ப்பதில் தமிழ்த்துறை முன்னெடுத்து வருகிறது.

துறையின் பலங்கள் (Strength)

  1. அனுபவமுள்ள பேராசிரியர்கள்.
  2. மாணவர்களை வழிநடத்தும் நல்ல கற்பித்தல் முறை.
  3. வளமான பாடத்திட்டம்.
  4. மாணவர்களை ஆய்வு செய்வதற்கு ஊக்கமளித்தல்.
  5. ஆய்வுக் கட்டுரைகள் எழுத ஊக்கமளித்தல்.
  6. மேடைப் பேச்சுத்திறனை வளர்த்தல்.
  7. வேலைவாய்ப்பு தொடர்பான திறன்கள்.
  8. வளமான நூலகம் மற்றும் வாசிப்புத்திறனை வளர்த்தல்.
  9. .சமூக சேவைகளைப் பரப்புதல்

பாடத்திட்ட விளைவுகள் (Program Outcomes)

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தமிழ்த்துறை அனைத்து துறைகளுக்கும் பொதுத்தமிழ் (Part – 1) வகுப்பு எடுக்கும் துறையாக இருந்து வந்தது. தமிழின் முன்னேற்றம் கருதி மாணவ மாணவிகளைத் தேர்வு நோக்கிலும் படைப்புத் திறனை வளர்க்கும் நோக்கிலும் 2014 ஆம் ஆண்டு தமிழ்த்துறை தனித்துறையாக வளர்ச்சி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதுகலைத் துறையாக முன்னேற்றம் கண்டு மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஏற்ப சிறப்பான முறையில் பணிபுரிந்து வருகின்றோம்.

சேர்க்கைப் பாடநெறி (Add On Course)

வீரமாமுனிவர் மன்றம் - மாணவர்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வாரம் ஒருமுறை இம்மன்றம் நடத்தப்படுகிறது. இதில் தமிழ் மாணவர்கள் மட்டுமல்லாது பிற துறை மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாணவர்கள் பேச்சாற்றலில் சிறந்து விளங்குகின்றனர்.

படைப்புக்கலையும் பங்களிப்பும் - மாணவர்களின் சிந்தனை உணர்வு, கற்பனை ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக படைப்புக்கலையும் பங்களிப்பும் என்ற வகுப்பானது வாரத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்த்துறை மற்றும் பிற துறை மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் புதினம் போன்ற பல்வேறு இலக்கியப் படைப்பில் மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

வள்ளுவர் வாக்கு - மாதத்திற்கு ஒருமுறை வள்ளுவர் வாக்கு என்ற வகுப்பும் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகுப்பினால் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறக்கருத்துக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிகாரத்தின் வழி தேர்வு நடத்தியும் வருகின்றோம். மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெற்றுள்ளனர்.

சாதனைகள் (Achievements)

  1. கல்விசார் சாதனைகள் - மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளனர். போட்டித் தேர்வுகளில் (TNPSC, UPSC) போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

  2. ஆய்வு மற்றும் வெளியீடுகள் - பேராசிரியர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளனர். தமிழியல், இலக்கியம், மொழியியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆய்வுநூல், பொதுத்தமிழ் மற்றும் துறைசார் நூல்களை வெளியிட்டுள்ளனர்.

  3. பண்பாட்டு நிகழ்ச்சிகள் - தமிழ் இலக்கிய விழாக்கள், படைப்பிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தமிழ்மொழி நாள் குறித்து கொண்டாடப்படுகிறது.

  4. திறன் மேம்பாட்டு செயல்பாடுகள் - மாணவர்களுக்கு பேச்சுத்திறன், எழுதுத்திறன் பயிற்சிகள். பணிமனைகள் (Workshops), கருத்தரங்குகள் (Seminars) நடத்தல். தொழில்முறை திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் நடத்தல்.

  5. சமூகப் பணிகள் - சமூக விழிப்புணர்வு முகாம்கள். தமிழ்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் சேவைகள். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவி.

பேராசிரியர்களின் சாதனைகள் (Faculty Achievements)

  1. தேசிய ஆய்வு இதழ்கள் வெளியீடு
  2. ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு
  3. பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.
  4. ஆய்வு மாணவர்கள் சேர்க்கை

மாணவர்களின் சாதனைகள் (Student Achievements)

  1. பன்னாட்டு மற்றும் தேசியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டனர்.
  2. பல கல்லூரிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளனர்.
  3. அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளனர்.
  4. திருக்குறள் பயிற்சியில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
  5. இராமநாதபுரம் செய்யது ஹமீதா மற்றும் செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற நுண்கலைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

செயல்பாடுகள் (Activities)

  1. வீரமாமுனிவர் மன்றம்
  2. தமிழ் மன்றம்
  3. மாநிலக் கருத்தரங்கம்
  4. கையெழுத்துப் பயிற்சி
  5. திருக்குறள் பயிற்சி

முன்னாள் மாணவர்கள் (Alumni)

  1. M. Salini - Teacher From Ourlady of Fatima school,Ambavayal.
  2. S. Surthi - PHD Work.
  3. N. Abimanyu - Teacher From KVS Higher Secondary school Govai.
  4. k. surya - Advocate.

பேராசிரியர் பட்டியல் (Faculty List)

Physics Department
Mrs. M. Muthu
Head & Assistant Professor
Dr. G. Dharmaraj
Assistant Professor
Mrs. S. Elizabeth Rani
Assistant Professor
Mrs.S. Kavitha
Assistant Professor
  • Introduction to Figma Essentials training course

  • Introduction to Figma Essentials training course
    Preview 02:34
  • Getting started with Figma training
    Preview 02:34
  • What is Figma for & does it do coding?
    Preview 02:34
  • What's the difference between UI and UX in Figma
    02:34
  • Class project 01 - Create your own brief
    02:34
  • Class project 01 - Create your own brief
    1 question

புகைப்படங்கள் (Gallery)

தேர்வு
மாநிலக் கருத்தரங்கம்
பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்குதல்
கல்விச் சுற்றுலா

Sign Up today to get the
latest inspiration & insights